பிற விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேற்றம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

தினத்தந்தி

பெல்கிரேட்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் 71 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ அல்வாரிஸ்சை சந்தித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் நிஷாந்த் தேவ் 3-2 என்ற கணக்கில் மார்கோ அல்விராஸ்சை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இதே போல் 92 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் ஜார்ஜியா வீரர் ஜியோர்ஜியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். சஞ்சீத் தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.

இந்திய வீரர்களான ஆகாஷ் குமார் மற்றும் நரேந்தர் ஆகியோர் ஏற்கெனவே காலிறுதிக்கு தகுதிபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு