எச்.எஸ்.பிரனாய் (image courtesy: HS Prannoy twitter via ANI) 
பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் கால்இறுதிக்கு முன்னேறினார்

தினத்தந்தி

ஹோபன்ஹேகன்,

28-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க்கின் ஹோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-15, 19-21, 21-9 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் லியோ ரோலி கார்னன்டோ- டேனியல் மார்தின் இணையை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

இதன் ஒற்றையர் 3-வது சுற்றில் 9-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனாய் (இந்தியா) 21-18, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான லோ கியான் யேவுக்கு (சிங்கப்பூர்) அதிர்ச்சி அளித்து கால்இறுதியை எட்டினார்.

பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை 14-21, 9-21 என்ற நேர் செட்டில் சீனாவின் சென் கியூங் சென்- ஜியா யி பேன் ஜோடியிடம் தோற்று வெளியேறியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து