பிற விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ்: இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஏமாற்றம்

கேண்டிடேட்ஸ் செஸ்: இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஏமாற்றம்

பெஜியா,

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று 10-வது சுற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பிரக்ஞா னந்தா 53-வது நகர்த்தலில் உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவிடம் தோல்வி அடைந்தார்.

இன்னும் 4 சுற்று எஞ்சியுள்ள நிலையில் சிந்தாரோவ் 8 புள்ளிகளுடன் முத லிடத்தில் நீடிக்கிறார். பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து விட்ட பிரக்ஞா னந்தா 4 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

பெண்கள் பிரிவில் தமிழகத்தின் ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முசி சுக் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.வைஷாலி 6 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளார்.