பிற விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா டிரா

ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீரர் கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்

பெஜியா,

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப் ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. ஆண்கள் பிரிவில் பங்கேற்றுள்ள 8 வீரர் கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலி டத்தை பிடிக்கும் வீரர் பட்டத்தை வெல்வதுடன் உலக செஸ் சாம்பியன் ஷிப்புக்கும் தகுதி பெறுவார்.

நேற்று 4-வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இந்திய கிராண்ட்மாஸ்ட ரான தமிழகத்தின் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் மத்தியாஸ் புளுபாமை சந்தித்தார். விறுவிறுப்பான ஆட்டம் 37-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.