பிற விளையாட்டு

கேண்டிடேட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா தோல்வி

உஸ் பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ் 6½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பெஜியா,

கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது. 14 சுற் றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 8-வது சுற்று நடந்தது. ஆண்கள் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டரான தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர் லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 44-வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக் கொண்டார். உஸ் பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

பெண்கள் பிரிவில் ஆர்.வைஷாலி (இந்தியா)- பிபிசரா அசாபயேவா (கஜ கஸ்தான்) இடையிலான ஆட்டம் 'டிரா'வில் முடிந்தது. மற்றொரு ஆட்டத் தில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், உக்ரைனின் அன்னா முசிசுக்கை தோற்கடித்தார்.