பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.

தினத்தந்தி

பாங்காக்,

யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-9, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 42 நிமிடங்களில் தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து மகுடம் சூடினார்.

ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில் லாங் அங்குசை (ஹாங்காங்) வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். பட்டம் வென்ற இருவருக்கும் தங்கப்பதக்கத்துடன் தலா ரூ.51 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது.

அடுத்ததாக இதே பாங்காக்கில் டோயோட்டா தாய்லாந்து ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நாளை தொடங்குகிறது. கரோலினா மரின், தாய் ஜூ யிங், உலக சாம்பியன் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நோவால் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த போட்டியிலும் பங்கேற்கிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்