image tweeted by @FIDE_chess 
பிற விளையாட்டு

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் குகேஷ்..!

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) சார்பாக ஒவ்வொரு மாதமும் அதிகாரப்பூர்வ ரேட்டிங் பட்டியல் வெளியிடப்படும். இந்த ரேட்டிங் பட்டியலில் கடந்த 37 ஆண்டுகளாக விஸ்வநாதன் ஆனந்த் இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்தார்.

இந்த நிலையில் இன்று சர்வதேச செஸ் சம்மேளனத்தின் ரேட்டிங் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் தமிழக வீரர் குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறியுள்ளார். இதன் மூலம் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

2,758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8-வது இடத்திற்கு குகேஷ் முன்னேறியுள்ளார். முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் 2,754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார். முன்னதாக கடந்த மாதம் வெளியான சர்வதேச செஸ் சம்மேளனத்தின் லைவ் ரேட்டிங்கில் குகேஷ் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா சர்வதேச தரவரிசை பட்டியலில் 19-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை