பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் - முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா

இந்திய வீரர் ரவுனக் சத்வாணி, ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் சுற்று ஆட்டம் மாமல்லபுரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.

இந்திய ஓபன் பி பிரிவில் விளையாடிய ரவுனக் சத்வாணி ஐக்கிய அரபு அமீரக வீரர் அப்துல் ரகுமானை எதிர்கொண்டார். அவர் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றுள்ளார். 16 வயதே நிரம்பிய இவர் உலக தரவரிசையில் 185 ஆவது இடத்தில் உள்ளார். இவர் நாளை எந்த நாட்டு வீரரோடு மோதுவார் என்ற பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.

போட்டி முடிந்தபிறகு வெற்றிபெற்றது குறித்து ரவுனக் சத்வாணி கூறுகையில், இது எனக்கு முதல் ஒலிம்பியாட் போட்டி ஆகும். இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.   

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை