பிற விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட்; மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடிய இந்திய அணியினர்

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

தினத்தந்தி

புடாபெஸ்ட்,

45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியினரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொடரில் தங்கம் வென்ற பின்னர் இந்திய அணியினருக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. அந்த கோப்பையை தானியா சச்தேவ் மற்றும் டி குகேஷ் ஆகியோர் கையில் ஏந்தியபடி, மெஸ்ஸி மற்றும் ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடினர்.

கால்பந்து உலகக்கோப்பை தொடரை வென்ற போது அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி கோப்பையை கையில் ஏந்தியபடி நடை கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல், கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வென்ற போது ரோகித் சர்மா மெஸ்ஸியை போலவே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினரும் மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடி உள்ளணர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்