பிற விளையாட்டு

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிரா; வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடைபெறும்

வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

பாகு,

10-வது உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சென்-இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதினர்.

இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் ஆட்டத்தின் 35-வது நகர்த்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்றது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இந்நிலையில் 30 நகர்தல்களுக்குப் பிறகு இன்றைய ஆட்டமும் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்