பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பொன்னப்பா மற்றும் ராங்கிரெட்டி இணை முன்னேற்றம்

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பொன்னப்பா மற்றும் ராங்கிரெட்டி இணை முக்கிய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் 24-22, 21-7 என்ற செட் கணக்கில் சீன தைபே இணையை இந்திய இணை வீழ்த்தியது.

இதனை தொடர்ந்து நாளை நடைபெறும் முதல் சுற்று போட்டியில் டென்மார்க்கின் மேத்தியாஸ் கிறிஸ்டியன்சென் மற்றும் கிறிஸ்டினா பெடர்சன் இணையை எதிர்த்து இந்திய இணை விளையாடுகிறது.