பிற விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கால்இறுதி சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

தினத்தந்தி

சாங்ஜோவ்,

மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவ் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான சென் யுபியை (சீனா) சந்தித்தார். 52 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 11-21, 21-11, 15-21 என்ற செட் கணக்கில் சென் யுபியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 9-21, 11-21 என்ற நேர்செட்டில் ஜப்பான் வீரர் கென்டோ மெமோட்டாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தார். இந்த வெற்றியை பெற கென்டோவுக்கு 28 நிமிடமே தேவைப்பட்டது. இருவரும் கண்ட தோல்வியின் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்