புதுடெல்லி,
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 4-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இந்த நிலையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் பாரம்பரிய தீப தொடர் ஓட்டத்துடன் தொடங்கியது.
இன்று காலை ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் இந்திய ராணுவ வீர்களிடம் தலையில் காயம் அடைந்த சீன ராணுவத்தின் கமாண்டர் கி பேபவோ ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்திக் கொண்டு பயணித்தார்.
2020ம் ஆண்டில் நடந்த அந்த சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்திய வீரர்களுடன் சண்டையில் ஈடுபட்ட கமாண்டர் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தியிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் சீன மீடியா ஒன்று, கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர், சீன தேசியக் கொடியை ஏற்றும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.