கோல்டுகோஸ்ட்,
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 10-வது நாளான இன்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்து வருகிறது.
* காமன் வெல்த் போட்டியின் மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் குத்துச் சண்டையில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலாங்கி தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் பிரிவு மல்யுத்தப்போட்டி 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியவீரர் சுமித் மாலிக் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் பெண்கள் மல்யுத்தப்போட்டி 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 60 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் மணீஷ் கவுசிக் வெள்ளி பதக்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆண்கள் குத்துச்சண்டை 46-49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் வெள்ளி பதக்கம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் பெண்கள் மல்யுத்தப்போட்டி 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார்.
* காமன்வெல்த் போட்டியின் ஆடவர் பிரிவு மல்யுத்தப்போட்டி 86 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சோம் வீர் வெண்கலம் வென்றார்.
இந்தப்போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இன்று இந்தியா இதுவரை 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலபதக்கங்களை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியா 23 தங்கம், 13 வெள்ளி, 16 வெண்கலம் உள்பட மொத்தம் 52 பதக்கங்களுடன் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.