பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சாத்விக் - சிராக் ஷெட்டி இணை, இந்தோனேசியா ஜோடியை எதிர்கொண்டது.

தினத்தந்தி

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை, முகமது ரியான் அர்டியான்டோ- ரஹ்மத் ஹிதாயத் (இந்தோனேசியா) ஜோடியை எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-15, 18-21, 21-16 என்ற செட் கணக்கில்  இந்தோனேசியா ஜோடியை  வீழ்த்தி  சாத்விக்-சிராக் ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென் 9-21, 14-21 என்ற நேர் செட்டில் அலெக்ஸ் லேனியரிடம் (பிரான்ஸ்) தோல்வி கண்டார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்