பிற விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தினத்தந்தி

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகின்றன. இதில், மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.

ஒரு மணிநேரம் மற்றும் 7 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், சிந்து 21.16, 12-21, 21-15 என்ற புள்ளி கணக்கில் பூசணனை வீழ்த்தினார்.

முதல் செட்டை கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டில் தோல்வி கண்டார். 2வது செட்டை பூசணன் வெற்றி பெற்ற சூழலில், போட்டி 3வது செட்டை நோக்கி சென்றது. இதில், சிந்து அதிரடியாக விளையாடி போட்டியை தன்வசப்படுத்தினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை