பிற விளையாட்டு

மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: கால்இறுதியில் லேடி சிவசாமி அணி வெற்றி

கால்இறுதி ஆட்டங்களில் சென்னை ரோட்லெர், குண்டூர் சுப்பையா, ஜேப்பியார் அணிகள் வெற்றி கண்டன.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் வேலம்மாள் 25-0, 25-0 என்ற செட் கணக்கில் ஒய்.எம்.சி.ஏ. அணியை வென்றது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் செயின்ட் பீட்ஸ், செயின்ட் பீட்டர்ஸ், டான்போஸ்கோ அணிகள் வெற்றி பெற்றன.

பெண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் லேடி சிவசாமி அணி 20-25, 25-5, 25-10 என்ற செட் கணக்கில் வித்யோதயாவை சாய்த்தது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சென்னை ரோட்லெர், குண்டூர் சுப்பையா, ஜேப்பியார் அணிகள் வெற்றி கண்டன. இரு பிரிவிலும் கால்இறுதியில் வெற்றி பெற்ற அணிகள் 'சூப்பர் லீக்' சுற்றுக்கு முன்னேறின.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது