கோப்புப்படம்  
பிற விளையாட்டு

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடக்கம்

பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து போட்டி சென்னையில் 31-ந் தேதி தொடங்குகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சான் அகாடமி கல்வி குழுமம் சார்பில் பள்ளி அணிகளுக்கு இடையிலான 5-வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். வயது கட்டுப்பாடு கிடையாது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 28-ந் தேதிக்குள், 'செயலாளர், சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரியிலோ அல்லது chennaidistrictvolleyballassn@gmail.com என்ற இ-மெயில் மூலமோ தங்களது பெயர்களை பதிவு செய்யலாம் என்று சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சி.ஸ்ரீகேசவன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...