பிற விளையாட்டு

துளிகள்

கடந்த சில சீசன்களில் டோனி விளையாடிய விதத்தை கவனித்தால் அவரது சிறந்த கிரிக்கெட் காலம் கடந்து விட்டது தெரிய வரும் என்று இந்திய முன்னாள் வீரர் ரோஜர் பின்னி கூறியுள்ளார்.

தினத்தந்தி

* கடந்த சில சீசன்களில் டோனி விளையாடிய விதத்தை கவனித்தால் அவரது சிறந்த கிரிக்கெட் காலம் கடந்து விட்டது தெரிய வரும். அவர் கொஞ்சம் உடல்தகுதியை இழந்து விட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் ரோஜர் பின்னி கூறியுள்ளார்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் வெஸ்ட் இண்டீசுக்கு சென்று 2 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா எதிரொலியாக இந்த தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித் தெரிவித்தார்.

* சவுதம்டனில் நேற்றிரவு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்தது. கேம்பெர் (68 ரன்) மீண்டும் அரைசதம் அடித்தார். அடுத்து 213 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது.

* தெலுங்கானாவில் நான்கு மாத கால ஊரடங்குக்கு பிறகு வருகிற 5-ந்தேதி முதல் விளையாட்டு நடவடிக்கைகளை தொடங்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அன்று முதல் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்டோர் ஐதராபாத்தில் மீண்டும் பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்