பிற விளையாட்டு

துளிகள்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் ஹாமில்டன் மசகட்சா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

தினத்தந்தி

* ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மூன்று வடிவிலான போட்டிக்கும் ஹாமில்டன் மசகட்சா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். துணை கேப்டனாக பீட்டர் மூர் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* நியூசிலாந்து -வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டுனெடினில் இன்று நடக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது.

* ஓமன் நாட்டில் நேற்று நடந்த உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆட்டம் ஒன்றில் ஸ்காட்லாந்துக்கு எதிராக களம் இறங்கிய ஓமன் அணி 17.1 ஓவர்களில் வெறும் 24 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

* இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை விட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மாஸ்கஸ் ஸ்டோனிஸ் தான் தற்போது சிறந்த வீரர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.


முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு