பிற விளையாட்டு

துளிகள்

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட், அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.

தினத்தந்தி

* இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் யாரும் தங்களது வயதை ஏமாற்றி கலந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த வீரர், வீராங்கனைகள் 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

* இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டித் தொடரை முதல்முறையாக வெல்ல வேண்டும் என்பது தான் எங்களது ஒரே நோக்கமாகும். அது பற்றி தான் எல்லோரும் கவனம் செலுத்தி வருகிறோம். தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் அரங்கேறிய 41-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி 5-வது வெற்றியை பதிவு செய்தது.


பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்