பிற விளையாட்டு

துளிகள்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

தினத்தந்தி

* பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மிதாலி ராஜ் 47 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். பின்னர் 35 வயதான மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில், இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய உத்வேகம் அளிப்பதாகும். அதேநேரத்தில் எத்தனை ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி நல்ல மாற்றத்தை கண்டு வருகிறது. அணியில் நிறைய இளம் வீராங்கனைகள் உள்ளனர். எனவே நான் எப்படி ஆடுகிறேன் என்பதை விட அணியை குறித்து சிந்திக்க வேண்டிய நேரமாக இதனை கருதுகிறேன். தற்போதைய இந்திய அணி நல்ல நிலையில் உள்ளது. எனவே இது நான் ஆட்டத்தை விட்டு விலக சரியான தருணம் என்று நினைக்கிறேன். எனவே 20 ஓவர் போட்டியில் இது தான் எனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்