பிற விளையாட்டு

பார்முலா-1 கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் - முன்னாள் நிர்வாகி வலியுறுத்தல்

பார்முலா-1 கார் பந்தயத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அதன் முன்னாள் நிர்வாகி வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடுவதால் இந்த சீசனின் முதல் 8 சுற்று பந்தயங்கள் தள்ளிவைக்கப்பட்டும், சில ரத்து செய்யப்பட்டும் உள்ளன. எஞ்சியுள்ள 14 சுற்று பந்தயங்களும் திட்டமிட்டபடி நடப்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.

இது தொடர்பாக பார்முலா-1 கார்பந்தய முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோன் அளித்த ஒரு பேட்டியில், இந்த ஆண்டுக் கான பார்முலா-1 கார்பந்தயத்தை முழுமையாக ரத்து செய்து விட்டு, அடுத்த ஆண்டு போட்டிகளை தொடங்க வேண்டும்.

சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக புள்ளிகளை கணக்கிட குறைந்தது 8 சுற்று பந்தயமாவது ஒரு சீசனில் நடத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வளவு எண்ணிக்கையிலான போட்டிகள் நடக்க வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை. இது கடினமான ஒரு காலக்கட்டம் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்