பிற விளையாட்டு

பார்முலா1 கார்பந்தயம்: நெதர்லாந்து வீரர் முதலிடம்

பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் முதலிடம் பிடித்தார்.

தினத்தந்தி

ஸ்பைல்பெர்க்,

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9-வது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரி பந்தயம் ஸ்பைல்பெர்க் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.452 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். பந்தய தூரத்தை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 22 நிமிடம் 01.822 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். இந்த சீசனில் மெர்சிடஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்களே வெற்றி பெற்று வந்த நிலையில், அந்த ஆதிக்கத்துக்கு வெர்ஸ்டப்பென் முற்றுப்புள்ளி வைத்தார். நடப்பு சாம்பியனான லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 5-வதாக வந்தார்.

9 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் (197 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த சுற்று போட்டி இங்கிலாந்தில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்