Image : AFP  
பிற விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேற்றம்

இந்தியாவின் பி.வி.சிந்து , அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார்.

தினத்தந்தி

பாரீஸ்,

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து , அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார்.

இதில் 13-21, 21-10, 21-14 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை தோற்கடித்து பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் டிரீசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் (இந்தியா) ஜோடி 21-18, 21-13 என்ற நேர் செட்டில் யூகி புகுஷிமா- சயாக ஹிரோடா இணையை சாய்த்தது.

ஆண்கள் பிரிவில் இந்திய முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-19, 12-21, 20-22 என்ற செட் கணக்கில் சீனாவின் குவாங் சூவிடம் போராடி தோற்றார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது