பிற விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து, சாய்னா முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின், கால்இறுதிக்கு சிந்து, சாய்னா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

தினத்தந்தி

பாரீஸ்,

மொத்தம் ரூ.5 கோடி பரிசுத்தொகைக்கான பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான பி.வி.சிந்து (இந்தியா) 21-10, 21-13 என்ற நேர் செட் கணக்கில் யோ ஜியா மின்னை (சிங்கப்பூர்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 34 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. சிந்து அடுத்து நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) சந்திக்க வேண்டி வரலாம்.

மற்றொரு ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான இந்தியாவின் சாய்னா நேவால் 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் டென்மார்க்கின் லினே ஹோஜ்மார்க்கை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 18-21, 21-13 என்ற செட் கணக்கில் உலக சாம்பியனான இந்தோனேஷியாவின் முகமது ஆசன்-ஹென்ட்ரா செடியவான் இணைக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதியை உறுதி செய்தது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்