பிற விளையாட்டு

கேலோ இந்தியா விளையாட்டு: கைப்பந்து போட்டியில் தமிழக அணிகள் அபாரம்

கேலோ இந்தியா விளையாட்டின், கைப்பந்து போட்டியில் தமிழக அணிகள் அபாரமாக விளையாடின.

தினத்தந்தி

கவுகாத்தி,

3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தொடக்க லீக் ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-18, 25-16 என்ற நேர்செட்டில் இமாச்சலபிரதேசத்தை தோற்கடித்தது. இதே வயது பெண்கள் பிரிவில் தமிழக அணி 25-23, 25-22, 25-22 என்ற நேர்செட்டில் அரியானாவை வீழ்த்தியது. பெண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் முதலாவது லீக் ஆட்டத்தில் தமிழக அணி 20-25, 18-25, 15-25 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்திடம் பணிந்தது.

கபடி போட்டியில் பெண்களுக்கான 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தமிழக அணி 26-20 என்ற புள்ளி கணக்கில் பீகாரை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியை உறுதி செய்தது. 21 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தமிழக அணி 29-37 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேசத்திடம் வீழ்ந்தது. இதே வயது பெண்கள் பிரிவில் தமிழக அணி 19-21 என்ற புள்ளி கணக்கில் அசாமிடம் தோல்வி அடைந்தது. தோல்வி அடைந்த தமிழக அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து