பெர்லின்,
ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் லக்ஷயா சென் சக நாட்டவரான பிரனாயுடன் மோதினார். 39 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 21-15, 21-16 என்ற நேர் செட்டில் பிரனாயை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்செனுடன் (டென்மார்க்) மோதினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 10-21, 21-23 என்ற நேர் செட்டில் விக்டர் ஆக்சல்செனிடம் தோற்று வெளியேறினார். லக்ஷயா சென் அடுத்து ஆக்சல்சென்னை எதிர்கொள்கிறார்.