கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதலில் ருத்ராங்ஷ்- மெகுலி ஜோடிக்கு தங்கப்பதக்கம்

இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.

தினத்தந்தி

ஜகர்த்தா,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவு பந்தயத்தின் இறுதி சுற்றில் இந்தியாவின் ருத்ராங்ஷ் பட்டீல், மெகுலி கோஷ் இணை 16-10 என்ற புள்ளி கணக்கில் சென் யுபான்-ஜூ மிங்ஷூய் ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

இந்த போட்டியில் இந்தியா வென்ற 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் சிங் சீமா-ரிதம் சங்வான் கூட்டணி 11-17 என்ற புள்ளி கணக்கில் வியட்நாமின் து வின் டிரின்க்-குயாங் ஹூய் பாம் இணையிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு