image courtesy:PTI 
பிற விளையாட்டு

கிராண்ட் சுவிஸ் செஸ்: 5-வது சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி

குகேஷ் 5-வது சுற்றில் அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவிடம் தோல்வியை தழுவினார்.

தினத்தந்தி

சமர்கண்ட்,

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சமர்கண்ட் நகரில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி தொடர் ஓபன் மற்றும் பெண்கள் என இரு பிரிவில் நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

இதில் ஓபன் பிரிவில் 4-வது சுற்றில் சக நாட்டவர் அர்ஜூன் எரிகைசியுடன் டிரா கண்ட உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ் 5-வது சுற்றில் அமெரிக்காவின் அபிமன்யு மிஸ்ராவிடம் தோல்வியை தழுவினார். மற்றொரு இந்திய வீரர் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவும் ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாமுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இதன் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை வைஷாலி 35-வது நகர்த்தலில் கேத்ரினா லாக்னோவிடம் (உக்ரைன்) டிரா செய்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது