ஆமதாபாத்,
12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் நடந்த 23-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 39-21 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 4-வது லீக்கில் ஆடிய குஜராத்துக்கு இது 2-வது வெற்றியாகும்.