புதுடெல்லி,
9 அணிகள் இடையிலான புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ரூர்கேலாவில் நடந்த முதற்கட்ட சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்தியா தனது அடுத்த கட்ட ஆட்டங்களில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினுடன் விளையாட உள்ளது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடுகள வீரர் ஹர்திக் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.