மஸ்கட்,
சேலஞ்சர் பிளஸ் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி மஸ்கட்டில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் சரத் கமல் 6-11, 11-8, 12-10, 11-9, 3-11, 17-15 என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் மார்கஸ் பிரைட்டாசை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 37 வயதான தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் 2010-ம் ஆண்டு எகிப்து ஓபனை வென்ற பிறகு சொந்தமாக்கிய முதல் சர்வதேச பட்டம் இதுவாகும்.