பிற விளையாட்டு

தடகள வீராங்கனை ஹீமா தாசுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்த மாத இறுதியில் தடகளத்திற்கான தேசிய முகாம் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் தொடங்க உள்ளது

தினத்தந்தி

பாட்டியாலா

இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ். 21 வயதான இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 2018 ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400மீ தூரத்தை 50.79 வினாடிகளில் கடந்து சாதனை படைத்தவர் ஹீமா தாஸ்.

இந்த மாத இறுதியில் தடகளத்திற்கான தேசிய முகாம் பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலாவில் தொடங்க உள்ளது. இதற்கு தயாராகும் வீதமாக முகாமிற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தார் ஹீமா தாஸ். இந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது:

எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது .நான் தற்போது தனிமையில் இருக்கிறேன். எனது உடல்நிலை சீராக உள்ளது. இந்த நேரத்தில் முன்பு இருந்ததை விட மேலும் வலிமையாக மீண்டு வர நான் முயற்சி செய்வேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்