பிற விளையாட்டு

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி

பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

தினத்தந்தி

கோலூன்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 13-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கன்டா சுனியமாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேயின் சு லி யங்கை எதிர்த்து களம் இறங்க இருந்த இந்திய வீரர் லக்ஷயா சென் கடைசி நேரத்தில் விலகினார்.

பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் 14-21, 12-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாங் யி மானிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 18-21, 10-21 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் யோனி லியிடம் வீழ்ந்தார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி ஜோடி 21-19, 21-19 என்ற நேர்செட்டில் சீனதைபேயின் லீ சியா ஹின்-டெங் சுன் சன் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு