HS Prannoy (image courtesy: BAI Media via ANI) 
பிற விளையாட்டு

தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி

தைபே ஓபன் பேட்மிண்டன் கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.

தினத்தந்தி

தைபே,

தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனாய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது