மேரிகோமுக்கு நான் எதிரானவள் அல்ல - நிகாத் ஜரீன்
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், குறிப்பிட்ட தீர்மானத்தை ஒருமித்த உடன்பாடு இல்லாமலேயே நிறைவேற்றியதற்கு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ரஞ்சன் மஞ்சந்தாவுக்கும், எதிர்குரூப்பை சேர்ந்த மசூத் ஆலமுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது வெட்ககேடான செயல் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், எம்.பி.யுமான டெல்லியைச் சேர்ந்த கவுதம் கம்பீர், டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கலைக்கும்படி கங்குலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தகராறில் ஈடுபட்ட நிர்வாகிகளுக்கு வாழ்நாள் தடை விதிக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார்.