பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு உயர்வு; உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து

கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு அஜர்பைஜானில் நடைபெற இருந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

தினத்தந்தி

முனிச்,

இந்தியாவின் புதுடெல்லி நகரில் கடந்த மார்ச் மாதத்தில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 10 நாட்கள் நடந்த இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 22 நாடுகளின் வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

இந்நிலையில், அஜர்பைஜான் நாட்டின் பகு நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2021 நடைபெற இருந்தது. ஆனால், அந்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் போட்டியை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில், அஜர்பைஜானில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனை கவனத்தில் கொண்டு அஜர்பைஜான் குடியரசின் மந்திரிகள், போட்டியை நடத்துவது முறையாக இருக்காது மற்றும் பாதுகாப்பற்றது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 21ந்தேதி முதல் ஜூலை 2ந்தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள் ரத்து செய்யப்படுகின்றன என தெரிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து