பிற விளையாட்டு

சர்வதேச குத்துச்சண்டை போட்டி: இந்திய வீரர் கவுரவ் அரைஇறுதிக்கு தகுதி

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சவுகான் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தினத்தந்தி

அஸ்தானா,

எலோர்டா கோப்பை சர்வதேச குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 92 கிலோவுக்கு அதிகமான எடைப்பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சவுகான் 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீரர் டேனியல் சபர்பாயை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

63.5 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 6 முறை பதக்கம் வென்ற இந்திய வீரர் ஷிவ தபா 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அப்துலி அல்மாத்விடம் வீழ்ந்து நடையை கட்டினார். இதேபோல் 80 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் சஞ்சய் 0-5 என்ற கணக்கில் ஆசிய விளையாட்டு சாம்பியனான தோஹிதாபி தாங்லாதிஹனிடம் (சீனா) தோற்று வெளியேறினார்.

முந்தைய நாளில் நடந்த பெண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் நடப்பு உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை ராக்யம்பெர்டி ஜான்சயாவை விரட்டியடித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்