பிற விளையாட்டு

2024 பாரா ஒலிம்பிக்: இந்தியாவின் பதக்கம் இரட்டிப்பாகும்- பிரமோத் பகத்

2021 டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிக்கு முன் இந்திய அணி ஒரே ஆண்டில் பெற்ற அதிகபட்ச பாரா ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே.

டெல்லி

இந்த வருடம் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 5 தங்கம் ,8 வெள்ளி, 6 வெண்கல உட்பட 19 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. 2021 டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிக்கு முன் இந்திய அணி ஒரே ஆண்டில் பெற்ற அதிகபட்ச பாரா ஒலிம்பிக் பதக்கங்களின் எண்ணிக்கை நான்கு மட்டுமே.

இந்த நிலையில் இந்திய அணி இந்த ஆண்டு டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டியில் பெற்ற பதக்க எண்ணிக்கையை விட இரட்டிப்பு பதக்ககங்களை பாரிஸ் 2024 பாராஒலிம்பிக் போட்டியில் வெல்லும் என இந்திய பாராஒலிம்பிக் வீரர் பிரமோத் பகத் தெரிவித்துள்ளார். இவர் இந்த ஆண்டு நடந்து முடிந்த பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் ஆவார்.

இது குறித்து இன்று அவர் தெரிவித்ததாவது :

பாரிஸ் 2024 பாராஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியின் பதக்க எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று நான் நம்புகிறேன்.நமது பிரதமர் விளையாட்டு வீரர்களுக்கு முழு ஆதரவாக இருக்கிறார். பாராஒலிம்பிக் கவுன்சில் நமது விளையாட்டு வீரர்களை நன்றாக கவனித்து வருகிறது, பிரதமர் எங்களுடன் இருந்தால், வசதிகள் கொடுக்கப்பட்டால், அது நிச்சயம் சாத்தியம்.எவ்வளவு பயிற்சி பெறுகிறோம் அல்லது விளையாடுகிறோம் என்பததை விட எங்களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது என்பதே முக்கியம்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...