image courtesy: NCR News 
பிற விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்..!!

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பையில் இந்தியா மூன்றாவது தங்கம் வென்றுள்ளது.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணிகளான ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர்.

விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை 17-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.

இது உலகக் கோப்பையில் ஈஷா பெற்ற இரண்டாவது தங்கம் மற்றும் மூன்றாவது பதக்கமாகும், இதற்கு முன்பு அவர் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டியில் வெண்கலத்தை கைப்பற்றினார், மற்றும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

உலகக் கோப்பையில் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் போட்டியில், இந்தியா பதக்க சுற்றுக்கு பின்தங்கியது, பவேஷ் ஷெகாவத் 576 ரன்களுடன் 12 வது இடத்தைப் பிடித்தார், அனிஷ் பன்வாலா 571 ரன்களுடன் 18 வது இடத்தைப் பிடித்தார். குர்பிரீத் சிங் 554 ரன்களுடன் 32 வது இடத்தில் இருந்தார்.

மேலும் பதக்கப் பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா முதலிடத்தை அடைய வாய்ப்புள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்