பிற விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

இந்தியா 52 தங்கம் உள்பட 103 பதக்கங்கள் குவித்துள்ளது

தினத்தந்தி

ஷிம்கென்ட்,

16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அணிகளுக்கான 25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் பந்தயத்தில் குர்பிரீத் சிங், ராஜ்கன்வார் சிங் சந்து, அங்குர் கோயல் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1733 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. வியட்நாம் (1720 புள்ளி) வெள்ளியும், ஈரான் (1700 புள்ளி) வெண்கலத்தையும் பெற்றது.

இதன் அணிகள் பிரிவில் மணினி கவுசிக், சுரபி பரத்வாஜ், வினோத் விதர்சா ஆகியோரை கொண்ட இந்திய அணி 1846 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது. தென்கொரியா (1856.8 புள்ளி) தங்கமும், கஜகஸ்தான் (1828.2 புள்ளி) வெண்கலமும் பெற்றது. ஆண்களுக்கான டிராப் பிரிவில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் 107 புள்ளிகள் எடுத்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

இந்தியா இதுவரை 52 தங்கம் உள்பட 103 பதக்கங்கள் குவித்துள்ளது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்