பிற விளையாட்டு

வில்வித்தையில் ஜொலிக்கும் இந்திய வீரர்கள்!... வெற்றி பதக்கம் உறுதி!

ஆசிய வில்வித்தை தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

தினத்தந்தி

தாகா,

ஆசிய வில்வித்தை தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்பு அணியினர் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் பிரிவு வில்வித்தை போட்டியில், இந்தியா-வங்காளதேசம் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. பரபரப்பான இப்போட்டியில், இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்றன. இருப்பினும், இந்திய வீரர்களின் குறி மையப்பகுதிக்கு மிக அருகே இருந்ததால், அவர்கள் வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

மகளிர் அணி பிரிவில், இந்தியாவின் அங்கீதா பாகத், மது வெத்வாண் மற்றும் ரிதி ஆகியோர் சேர்ந்த இந்திய அணியினர் வியட்நாம் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

கலப்பு அணியினர் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ் மற்றும் ஜோதி சுரேகா வெண்ணாம் இணை கசகஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இதன்மூலம், இந்தியாவுக்கு ஆசிய வில்வித்தை தொடரில் 3 வெற்றி பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. இறுதிப்போட்டியில், உலக சாம்பியனான கொரியாவை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை