சென்னை,
ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்றில் விளையாடும் இந்திய வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்ய தகுதி போட்டி டெல்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடக்கிறது. இதில் பெண்கள் அணியை தேர்வு செய்யும் தேர்வு கமிட்டியின் உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த வி.தேவராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு ரெயில்வே விளையாட்டு அலுவலரான தேவராஜன், உலக குத்துச்சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றவர் ஆவார். அர்ஜூனா விருதும் பெற்று இருக்கிறார்.