Image Courtesy: AFP  
பிற விளையாட்டு

இந்தியா ஓபன் பேட்மிண்டன்; சாத்விக் - சிராக் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சியோ- காங் இணை

ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் சாத்விக்-சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ- எம்.எச். காங் இணையை எதிர்கொண்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் கடந்த 16ம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் கடைசி நாளான இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ - எம்.எச். காங் இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 2வது செட்டில் 11-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற கடைசி செட்டில் 21-18 என்ற புள்ளிக்கணக்கில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தி தென் கொரியாவின் எஸ்.ஜே. சியோ - எம்.எச். காங் இணை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது