கோப்புப்படம் PTI 
பிற விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு தகுதி

40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

துபாய்,

40-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை, சீன தைபேயின் லீ யாங்-வாங் சி லின் ஜோடியுடன் மோதியது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 13-14 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயம் காரணமாக லீ யாங்-வாங் சி லின் இணை போட்டியில் இருந்து விலகியது. இதனால் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய இணை இறுதிப்போட்டிக்குள் நுழைவது இதுவே முதல்முறையாகும்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு