பிற விளையாட்டு

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.

தினத்தந்தி

சாங்வான்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே இணை 634.4 புள்ளிகள் குவித்து முதலிடத்தை தனதாக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஹங்கேரியின் முன்னணி ஜோடியான இஸ்வான் பெனி-எஸ்தர் மெஸ்ஜாரோஸ் 630.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, ஹங்கேரி இணையுடன் மோதுகிறது. இறுதிசுற்றை எட்டியதன் மூலம் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஷிவா-பலாக் ஜோடி 574 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கஜகஸ்தான் இணையுடன் மோதுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்