கோப்புப்படம் 
பிற விளையாட்டு

உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்

உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 45 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா ஷரத் காருட் ஸ்னாட்ச் முறையில் 70 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 83 கிலோவும் என மொத்தம் 153 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் அவர் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். துருக்கி வீராங்கனை பெக்டாஸ் கான்சு மொத்தம் 150 கிலோவும், மால்டோவா வீராங்கனை ஹின்சு லுமினிதா 149 கிலோ எடையும் தூக்கி முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு