பிற விளையாட்டு

உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகல்

உலக ஸ்குவாஷ் போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியுள்ளது.

சென்னை,

பெண்களுக்கான உலக அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் டிசம்பர் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டியில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகி இருக்கிறது. இது குறித்து இந்திய ஸ்குவாஷ் சம்மேளன பொதுச்செயலாளர் சைரஸ் போஞ்சா விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தற்போதைய சூழலில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு செல்வதற்கான வழிகாட்டுதல் நடைமுறைகள் மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்திடம் இருந்து இன்னும் வரவில்லை. இந்த போட்டிக்கு வீராங்கனைகள் தயாராக போதிய காலஅவகாசம் இல்லை. இதனால் முன்னணி வீராங்கனைகளிடம் கலந்து ஆலோசித்து உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவது என்று இந்திய ஸ்குவாஷ் சம்மேளனம் முடிவு எடுத்தது. கொரோனாவின் தாக்கம் குறைந்ததும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையத்துடன் கலந்து ஆலோசித்து ஸ்குவாஷ் போட்டியை மீண்டும் தொடங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்