பிற விளையாட்டு

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

43.85 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை கைப்பற்றினர்.

ஷாங்க்யூ,

சீனாவில் நடைபெற்ற 2026 ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் 4x100 மீட்டர் ரிலே போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

விறுவிறுப்பான இறுதிப்போட்டி

சீனாவின் ஷாங்க்யூ நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஸ்ரபானி, சினேகா, சுதேஷ்ணா மற்றும் தமன்னா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

4x100 மீட்டர் தூரத்தை 43.85 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய மகளிர் 4x100 மீட்டர் ரிலே அணி ஆசிய ரிலே சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது.